கீழக்கரையில் குழந்தை மனசு பயிற்சி முகாம்

நவீன உலகில் குழந்தை வளர்ப்பு குறித்த மனோதத்துவ ரீதியிலான பயிற்சி முகாம் 26.08.2018, ஞாயிறு அன்று மாலை 04.20 மணி அளவில் கீழக்கரை சினர்ஜி இண்டர்நேஷனல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்ளும் முறை, டீன் ஏஜ் பிள்ளைகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு, அதிகப்படியாக வீடியோ கேம்ஸ், பேஸ்புக் பயன்படுத்தும் பழக்கத்திலிருந்து மீளும் முறை, Parenting Styles குறித்த ஆய்வு, மன அழுத்தத்தை குறைப்பதற்கான வழிமுறைகள், தன்னம்பிக்கையூட்டும் உதாரணங்கள், வேலை மற்றும் குடும்ப நிர்வாகம் ஆகியவற்றின் முக்கியத்துவம் அறிதல் போன்ற தலைப்புகளில் பயிற்சிகள் வழங்கப்படும்.

சென்னை மாஸ்டர்மைண்ட கன்சல்டிரைனிங் நிறுவனத்தின் உளவியல் ஆலோசகர் *முனைவர் எம்.ஹுஸைன் பாஷா* அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயிற்சியளிக்க உள்ளார். இவர் ஏற்கனவே துபாய், அபுதாபி, ஷார்ஜா, குவைத், மஸ்கட், ரியாத், ஜித்தா, மக்கா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு பயிற்சியளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறைவான நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். அனுமதி கட்டணமாக *ரூ.350* செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம்.

முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு *70923 74444, 97896 00823* என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.

Comments