+2 மாணவர்களுக்காக சிறப்பு பயிற்சி முகாம்

பன்னிரெண்டாவது படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையிலான சிறப்பு பயிற்சிமுகாம் 25.08.2018 அன்று காலை 10 மணிக்கு தாம்பரத்தை அடுத்துள்ள *தானிஷ் அஹ்மது பொறியியல் கல்லூரியில்* ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் எதிர்காலத்தில் எது மாதிரியான பாடங்களை எடுத்துப்படித்தால் பயனுள்ளதாக இருக்கும் என்பதை உளவியல் அடிப்படையில் தேர்வு செய்யும் முறைகளைக் குறித்தும், படிப்பில் கவனத்தை மேம்படுத்தும் முறைகளைக் குறித்தும் மாஸ்டர்மைண்ட் கன்சல்டிரைனிங் நிறுவனத்தின் இயக்குநர் *முனைவர் எம்.ஹுஸைன் பாஷா* அவர்கள் பயிற்சியளிக்க உள்ளார். கணிதத்தை எளிய முறையில் புரிந்துகொள்ளும் முறையினைக் குறி

த்து *பேரா. ஆஷிக் அலி* அவர்கள் பயிற்சியளிக்க உள்ளார்.

அனுமதிக் கட்டணமின்றி இலவசமாக நடத்தப்படும் இந்த நிகழ்வில் மாணவர்கள் வசதிக்காக வாகன வசதி, உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொள்ள *99620 22222* என்ற எண்ணில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம்.

Comments