சிறப்பாக நடைபெற்ற சினர்ஜியா 2018 நிகழ்ச்சி
சினர்ஜி இண்டர்நேஷனல் குழுமத்தின் ஆண்டு விழாக் கூட்டம் சினர்ஜியா 2018 என்ற தலைப்பில் 30.06.2018 அன்று கிழக்கு கடற்கரைச் சாலையிலுள்ள அரேபியன் கார்டன்ஸ் வளாகத்தில் நடைபெற்றது.
நிறுவன இயக்குநர்கள் முனைவர் எம்.ஹுஸைன் பாஷா அவர்கள் தலைமை வகிக்க, பொறியாளர் எஸ்.முஹம்மது இர்ஃபான் அவர்கள் சிறப்புரையாற்றினார். துணை இயக்குநர்கள் மஜ்மூனா, ஷாமிலா அவுக்கார் பாத்திமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சினர்ஜி இண்டர்நேஷனல் குழும நிறுவனங்களான ரய்யான் ஹஜ், உம்ரா சர்வீஸ், சினர்ஜி இண்டர்நேஷனல் இண்ஸ்டிடியூட், மாஸ்டர்மைண்ட் கன்சல்டிரைனிங், சினர்ஜி இண்டர்நேஷனல் காலேஜ், சமாதானக் கலை பத்திரிகை, சினர்ஜி இண்டர்நேஷனல் மீடியா, பிளாக் அண்டு ஒயிட் டூர்ஸ், சினர்ஜி இண்டர்நேஷனல் பப்ளிகேஷன்ஸ் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள், கிளை அலுவலக அலுவலர்கள், முகவர்கள் என பலரும் திரளாக கலந்துகொண்டனர்.



குழும நிறுவனங்களின் கடந்த நிதி ஆண்டின் செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள், வாடிக்கையாளர்களின் சேவைகளை மேம்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விரிவாக ஆலோசனை செய்யப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கடந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்டவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. புதிதாக இணைந்துள்ள முகமைகளுக்கான அதிகாரபூர்வ சான்றிதழ் முகவர்களுக்கு வழங்கப்பட்டன.


தொழிலதிபரும், Understand Quran அகாடமியின் உயர் அதிகாரியுமான கஜ்ஜாலி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பல்வேறு தொழில் நுட்பங்களைக் குறித்து விளக்கவுரையாற்றினார்.


ஊடகம் மற்றும் செய்தி தொடர்பான விஷயங்களை சிம் நிறுவனத்தின் இயக்குநர் காஜா மைதீன் அவர்களின் குழுவினர் ஒருங்கிணைத்தனர். குழும மேலாளர் சான்கான் தலைமையிலான குழுவினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை சிறப்பாக செய்திருந்தனர்.


























































































Comments

Post a Comment